அபராதத்தை மூவாயிரம் ரூபாவாக உயர்த்தத் தீர்மானம்!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களுக்கான அபராதத்தை மூவாயிரம் ரூபாவாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனால், பயணச்சீட்டு எடுக்காமல் பயணம் செய்பவர்கள் மூவாயிரம் ரூபாய் அபராதத்துடன், இரு மடங்கு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் .

பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களால் நாளாந்தம் சுமார் 70 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறியப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தால், 250 ரூபாய் அபராதமும், இரண்டு மடங்கு கட்டணமும் வசூலிக்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாக்கும்

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects