தேர்தல் நடவடிக்கைகளுக்காக நாரஹேன்பிட்டி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் பூட்டு!

நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தினை எதிர்வரும் 20ஆம் திகதி மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையமாகக் குறித்த அலுவலகம் செயற்படவுள்ளமையால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி , தேர்தல் நடவடிக்கைகளை இடையூறின்றி நடத்துவதற்கு ஏதுவாக எதிர்வரும் 20ஆம் திகதி வழமையான பணிகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects