மட்டக்களப்பில் பூஜை வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட புதிய திரைப்படம்!

மீன்மகள் தயாரிப்பு நிறுவனத்தினால் உருவாக்கப்படவிருக்கும் புதிய திரைப்படம் ஒன்றிற்கான பூஜை நிகழ்வுகள் 18-09-2024 அன்று மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை அன்னை மாதா ஆலயத்தில் இயேசு சபையை சேர்ந்த அருட்தந்தை சொலமனின் ஆசீர்வாதத்துடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் அனா கத்லின் கென்னடி, இயக்குநர் குழந்தைவேல் கோடீஸ்வரன் மற்றும் படத்தின் கதையாசிரியரான பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி உட்பட படத்தில் பணியாற்றவிருக்கும் ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், உறவினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

மத வழிபாட்டைத் தொடர்ந்து அருட்தந்தையால் படத்தின் படப்பிடிப்பு கிளாப்பர் அடிக்கப்பட்டு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தயாரிப்பாளரினால் படப்பிடிப்பிற்கான பொறுப்பு இயக்குநரிடம் கையளிக்கப்பட்டது.

இத்திரைப்படத்தின் வசனங்கள் சரோனித் பிரேம்குமாரினால் எழுதப்பட்டுள்ளதுடன், இசையமைப்பாளராக AJ சங்கர்ஜன் பணியாற்ற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது, குறித்த தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டாவது திரைப்படம் என்பதுடன் இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட GPS எனப்படும் திரைப்படமும் மட்டக்களப்பில் பெருமளவான இரசிகர்களின் ஆதரவைப் பெற்ற வெற்றிகரமான ஓர் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புகைப்பட உதவி M.சிவகுமார்

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

One Response

  1. Поисковая оптимизация сайтов — это комплекс действий, нацеленных на повышение рейтинга в поисковых системах.
    Ключевая задача поисковой оптимизации — вывести проект в топ поисковой выдачи по целевым словам.
    разработка сайтов в Ростове-на-Дону
    Для этого оптимизаторы осуществляют внутренний аудит, трудятся над текстами, структурой и ссылочным профилем.
    В итоге веб-ресурс делается популярнее в поиске, получает больше аудитории и увеличивает продажи.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects