இலங்கைக்கு அதிகளவிலான சுற்றற்றுலாப்பயணிகள் வருகை – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை

இவ்வருடத்தின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1,901,988 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி , டிசம்பர் மாதத்தின் முதல் 15 நாட்களில் 97,115 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இக் காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 21,174 ஆகும்.

மேலும் , ரஷ்யாவிலிருந்து 13,762 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 7,417 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 6,574 சுற்றுலாப் பயணிகளும் , அவுஸ்திரேலியாவிலிருந்து 5,198 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 5,598 சுற்றுலாப் பயணிகளும் , அமெரிக்காவிலிருந்து 2,922 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects