சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,737 குடும்பங்கள் பாதிப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,737 குடும்பங்களைச் சேர்ந்த 11,977 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

3,037 குடும்பங்களைச் சேர்ந்த 10,031 பேர் தங்களது உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 9 இடைத்தங்கல் முகாம்களில் 334 குடும்பங்களைச் சேர்ந்த 921 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

17 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை , மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்ட பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியூடான போக்குவரத்து இன்று (21.01.2025) காலை 7 மணி முதல் மீண்டும் இடம்பெறுவதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு , பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மனம்பிட்டிய – கல்லேல்லவுக்கு இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்டிருந்த வெள்ளப்பெருக்கு தற்போது குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects