போக்குவரத்து அபராதங்களை செலுத்த புதிய வசதி!

போக்குவரத்து விதிமீறல்களுக்காக பொலிஸாரினால் வழங்கப்படும் அபராதங்களை சாரதிகள் இணைவழி ஊடாக செலுத்தக்கூடிய வகையிலான ஒரு முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதன் பிரகாரம், அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட GovPay செயலி மூலம் இக் கொடுப்பனவுகளைச் செலுத்தமுடியும் . 

இத் திட்டம் குருநாகல் முதல் அனுராதபுரம் வரையிலான வீதியின் 11 இடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி, இம் மாதம் 30 ஆம் திகதி வரை இது அமுலில் இருக்கும் என்று வீதிப் பாதுகாப்புக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார். 

பெப்ரவரி 7 ஆம் திகதி GovPay வசதி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இதனூடாக பொதுமக்கள் அனைத்து அரசாங்கக் கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் முறையில் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects