அசைவ உணவுகளை தொடர்ச்சியாக பாவிப்பதால் இதய பாதிப்பு ஏற்படுமா?
இன்றைய சூழலில் எம்முடைய வீடுகளில் உள்ள இளைய தலைமுறையினர் எந்த ஒரு கொண்டாட்டமாக இருந்தாலும் அல்லது வார இறுதி விடுமுறையாக இருந்தாலும் அசைவ உணவை தான் விரும்பி பசியாறுகிறார்கள்.
இது தொடர்பாக வீட்டில் உள்ள மூத்த உறுப்பினர்கள் கவலை அடைந்தாலும் இளைய தலைமுறையினர் இது தொடர்பாக எந்த எதிர்வினையையும் ஆற்றுவதில்லை.
இந்நிலையில் அசைவ உணவுகளை தொடர்ச்சியாக பாவிப்பதால் இதய பாதிப்பு ஏற்படுமா? என்ற அச்சம் பொதுமக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக இதய மருத்துவ நிபுணர் விளக்கமளிக்கையில், ” ஐரோப்பியர்களும், மேலத்தேய நாட்டவர்களும் நாளாந்தம் தங்களது உணவில் அசைவத்தை சேர்த்துக் கொள்கிறார்கள்.
அவர்கள் அசைவ உணவுகளை தவறாமல் தொடர்ந்து சாப்பிடுகிறார்கள். அவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்படுவதில்லை. ஏனெனில் அவர்கள் அசைவ உணவை அவர்களுக்கு தேவையான கலோரிகளில் மட்டுமே பசியாறுகிறார்கள்.
ஆனால் எம்மவர்கள் கொர்போஹைட்ரேட் சத்தையும், அசைவ உணவையும் இயல்பான அளவை விட கூடுதலாகவே ஒரே வேளையில் பசியாறுகிறார்கள். இதன் காரணமாகவே எம்முடைய உடலில் கெட்ட கொழுப்பு சத்து சேகரமாகி இதய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதனால் அசைவ உணவை பசியாறுவதால் இதய பாதிப்பு ஏற்படுவதில்லை என்பதும், ஆனால் அதே தருணத்தில் அசைவ உணவை அகால வேளையிலும், தகாத முறையில் பசியாறினால்.. இதய பாதிப்பு ஏற்படும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அத்துடன் நாளாந்தம் எம்முடைய இதய ஆரோக்கியத்திற்கு தேவையான கலோரிகளை கொண்ட அசைவ உணவுகளை சாப்பிடுவதால் இதயம் சார்ந்த எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
வைத்தியர் சுரேஷ் குமார்


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()








