தனியார் பேருந்துகளில் பயணச் சீட்டு வழங்கல் நாளை முதல் கட்டாயம்!

தனியார் பேருந்துகளில் பயணச் சீட்டு இன்றி பயணிக்கும் பயணிகளுக்கு நாளை (01.10.2025) முதல் அபராதம் விதிக்கப்படும் என மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. 
​
இதே வேளை பயணச் சீட்டுக்களை வழங்காத நடத்துனர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என அதன் செயல்பாட்டு முகாமையாளர் ஜீவிந்த கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார். 
​
எனவே, நாளை (01.10.2025) முதல், மேல் மாகாணத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்கப்படுதலும், அதில் பயணிக்கும் பயணிகள் பயண நேரத்தின் போது அதனை தம்வசம் வைத்திருப்பதும் கட்டாயமானதாகும் என அவர் சுட்டுக்காட்டியுள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects