கிரான் பிரதேச செயலகத்திற்கு வெள்ளஅனர்த்தத்தினை முகாமைத்துவம் செய்வதற்கான உபகரணங்கள் மற்றும் பொருட்கள் கையளிப்பு!

அக்ஷன் யுனிட்டி லங்கா (AU Lanka) நிறுவனத்தினால் நியூசிலாந்து நாட்டின் வர்த்தக அமைச்சு மற்றும் Child Fund நியூசிலாந்து ஆகியவற்றின் நிதி அனுசரணையில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் அமுல்படுத்தப்பட்டுள்ள Community – Led Climate Adaptation for Island Resilience (CCAIR) திட்டத்தின் ஊடாக வெள்ள அனர்த்த நிலைமைகளின் போது சமூக மக்களின் இடர்பாடுகளை நிவர்த்தி செய்வதற்காக பயன்படுத்தக்கூடிய உபகரணங்கள் மற்றும் பொருட்கள் 18.11.2025 அன்று கையளிக்கப்பட்டது.

இதில் 19.5 அடி நீளமான (இருக்கைகளுடன் கூடிய) படகு ஒன்றும், 25 குதிரை வலு கொண்ட சுசுகி படகு இயந்திரம் ஒன்றும், 20 உயிர்காப்பு அங்கிகளும், 20 மழைக்கான மேல் அங்கிகளும் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் முன்னிலையில் Child Fund நியூசிலாந்தின் திட்ட முகாமையாளர் Matt Fowler இனால் கிரான் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் லோஜினி விவேகானந்தராஜாவிடம் கோரகல்லிமடு பிரதேச செயலகத்திற்கு சொந்தமான அரச கட்டிடத்தில் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் Child Fund ஸ்ரீ லங்கா சிரேஷ்ட முகாமையாளர் M.அர்ச்சுதன், திருகோணமலை மாவட்ட அனைத்து முகாமைத்துவ மையத்தின் உதவி பணிப்பாளர் K. சுகுணதாஸ், AU Lanka நிறுவன ஊழியர்கள், பிரதேச செயலக ஊழியர்கள், கிராமமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் திட்ட பயனாளிகள் ஆகியோர் இணைந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

2 Responses

  1. Продвижение веб-ресурсов — это совокупность действий, направленных на улучшение позиций в результатах поиска.
    Основная задача поисковой оптимизации — вывести проект на первые места поисковой выдачи по ключевым словам.
    http://prodvizhenie-saytov-moskva.ru/sozdanie-saytov-v-permi/
    Чтобы достичь такого результата эксперты проводят технический анализ, трудятся над содержанием, структурой и ссылочным профилем.
    Благодаря этому проект становится заметнее в поиске, привлекает больше аудитории и повышает продажи.

  2. Такие платформы для совершеннолетних способны выступать инструментом сексуального ликбеза.
    Они дают возможность пользователям анонимно изучать свои желания и фантазии.
    общение с ии девушкой
    Для партнёров совместный просмотр способен служить поводом для откровенного разговора о потребностях.
    Помимо этого такие платформы позволяют уменьшать внутреннее напряжение и укреплять эмоциональное здоровье.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects