இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை!

2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகியுள்ளது.

இந் நிலையில், பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக 02.09.2026 அன்று பரீட்சைத் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே,

குறித்தப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 56,000 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெறுபேறுகளை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தவிர, 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 (குருநாகல்) மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

அத்தோடு, தமிழ் மொழி மூலமாக அதிகூடிய புள்ளியாக 188 பதிவாகியுள்ளதுடன், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே இந்த புள்ளி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இம்முறை பரீட்சையில் மாற்றுத்திறனுடைய 1,018 மாணவர்கள் தோற்றினர் எனத் தெரிவித்தார். 

கடந்த ஒகஸ்ட் 09 ஆம் திகதி நடைபெற்ற இந்த பரீட்சைக்காக 294,132 விண்ணப்பதாரர்கள் பதிவாகியிருந்த நிலையில், அவர்களில் 289,867 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects