ஜூலை மாதத்திற்கான தேயிலை, தேங்காய் மற்றும் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சி!

2026 ஜூலை மாதத்தில் இலங்கையின் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 1,233.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. 

இலங்கை மத்திய வங்கியின் ஜூலை மாதத்திற்கான வெளிநாட்டுத் துறை புல்லட்டின் (External Sector Bulletin) அறிக்கையின்படி, இது 2025 ஜூலை மாதத்தில் பதிவான 1,302.2 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் 5.3 சதவீத வீழ்ச்சியாகும். 

குறித்த மாதத்தில் விவசாய ஏற்றுமதி வருமானம் 272.7 மில்லியன் டொலர்களாக இருந்தபோதிலும், 2025 ஜூலை மாதத்தில் அது 310.1 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியிருந்தது. 

ஜூலை மாதத்தில் தேயிலை ஏற்றுமதி வருமானம் 116.7 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 17.2 சதவீத வீழ்ச்சியாகும். 

தேங்காய் ஏற்றுமதி வருமானம் 52.7 மில்லியன் டொலர்கள் வரை குறைவடைந்துள்ளதுடன், இது 2025 ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 10.9 சதவீத வீழ்ச்சியாகும். 

இதற்கிடையில், தொழில்துறை ஏற்றுமதி வருமானமும் 2025 ஜூலை மாதத்தில் பதிவான 984.6 மில்லியன் டொலர்களிலிருந்து 2026 ஜூலை மாதத்தில் 958.2 மில்லியன் டொலர்கள் வரை 2.7 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. 

அம்மாத்தில் இலங்கையின் முக்கிய ஏற்றுமதிப் பிரிவுகளில் ஒன்றான துணி மற்றும் ஆடை ஏற்றுமதி வருமானம் 439.3 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன், இது 2025 ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 8.7 சதவீத வீழ்ச்சியாகும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects