விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் ஒருங்கிணைந்த ஏழாவது மறு ஆய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டின் நான்காம் பிரிவு கலந்துரையாடலினை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழுவினர் இம் மாதம் 10 தொடக்கம் 23 வரையான காலப்பகுதிக்குள் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு தலைவர் இவான் பாபஜார்ஜியோ தலைமையிலான இந்த குழு சர்வதேச நாணய நிதியத்தின் உறுதுணையுடன் பொருளாதார சீர்த்திருத்தத் திட்டத்தில் கீழ் ஏற்பட்டுள்ள பொருளாதார முன்னேற்றத்தினையும் அண்மைய பேரியல் பொருளாதார நிகழ்வுகளையும் மதீப்பீடு செய்யவுள்ளது.
இந்த கலந்துரையாடலின் முடிவில் சர்வதேச நாணய நிதிய குழுவானது தனது கண்டுபிடிப்புக்களையும் வெளியிட தீர்மானித்துள்ளது.
சீர்த்திருத்த திட்டங்களின் கீழ் ஏற்பட்டுள்ள பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் அவற்றை ஆய்வு வெய்வதற்காக கடந்த ஜுன் மாதம் 24 முதல் 30 வரையான காலப்பகுதியில் சர்வதேச நாணய நிதிய குழுவானது மேற்கொண்ட பயணத்தினை தொடர்ந்து இம் மாதம் இந்த பயணம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









