பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் (G.C.E. A/L) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், வெற்றிடங்களை நிரப்பும் இரண்டாவது கட்டத்தின் கீழ் அரச பல்கலைக்கழகங்களின் இளமானி பட்டப் படிப்புகளுக்காக மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) குறித்த மாணவர்களின் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இச் சுற்றின் கீழ் பல்கலைக்கழகப் படிப்புகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் 2026 செப்டம்பர் 17 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யும் நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும்.

சம்பந்தப்பட்ட பெறுபேறுகள், பல்கலைக்கழக அனுமதி மற்றும் பதிவு செய்வதற்குத் தேவையான மேலதிக விவரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் www.ugc.ac.lk ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects