இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நிலத்திலும் கடலிலும் ஒரே நேரத்தில் இயங்கக்கூடிய உயர் தொழில்நுட்ப Amphibious (ஈருடக) படகு ஒன்று நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யும் வரலாற்றுச் செயற்பாடு 10.09.2026 அன்று கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் இடம்பெற்றது.
இந்தப் படகு Ocean Voyager International நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கடல்சார் உற்பத்தித் துறையில் புதிய மறுமலர்ச்சிக்கான ஆரம்பமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கருத்து மற்றும் திட்டங்களாக மட்டுமே காணப்பட்ட உள்நாட்டு உற்பத்திப் பொருளாதாரத்தை நடைமுறை ரீதியாக வெற்றியடையச் செய்வது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு என இதன்போது தெரிவிக்கப்பட்டது.
உலகின் முக்கிய கடல்சார் பாதைகளுக்கு மத்தியில் இலங்கை அமைந்துள்ள நிலையில், குறுகிய காலத்தில் அதிகளவான அந்நியச் செலாவணியை ஈட்டக்கூடிய முன்னணி துறையாக படகு மற்றும் கப்பல் உற்பத்தித் துறையை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.
இலங்கையின் திறமையான பொறியியலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் பங்களிப்புடன் நாட்டை பிராந்தியத்தின் முக்கிய கடல்சார் உற்பத்தி மையமாக மாற்றுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கத்தின் முழுமையான ஆதரவையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் SLYG நிறுவனக் குழுமத்தின் தலைவர் Pierre Pringiers உள்ளிட்ட நிறுவன நிர்வாகத்தினர் மற்றும் முதலீட்டு சபை (BOI) அதிகாரிகள் கலந்துகொண்டனர்.









இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()







