வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் டிஜிட்டல் பரிமாற்றக் குழு, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் இன்று (11.09.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் முதன்முறையாகக் கூடியது.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் துணைத் தூதரக (கொன்சியூலர்) பிரிவை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதற்கு இணையாக, வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் துணைத் தூதரகப் பிரிவுகளையும் டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் அரச நிறுவனங்களை துணைத் தூதரகங்களுடன் இணைத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் துணைத் தூதரகப் (கொன்சியூலர்) பிரிவின் பணிப்பாளர் நாயகம் கே. கே. டி. குமாரசிறி, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் துணைத் தூதரகப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுதந்த கனேகமஆராச்சி, டிஜிட்டல் அமைச்சின் ஆலோசகர் கலாநிதி மனோஜ் கமகே, GovTech Sri Lanka நிறுவனத்தின் டிஜிட்டல் பரிமாற்றப் பிரிவுத் தலைவர் Michael Helm உள்ளிட்ட குழுவின் ஏனைய உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








