தாய்லாந்தில் 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க தாய்லாந்து அரசு தீர்மானம்!

தாய்லாந்தில் நிலவும் தொழிலாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க தாய்லாந்து அரசு தீர்மானித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத் துறை உள்ளிட்ட துறைகளில் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வேலைவாய்ப்புகளுக்கு இலங்கையர்களை அனுப்புவதற்காக இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையே இரு விசேட ஒப்பந்தங்கள் 14.09.2026 அன்று கையெழுத்தாகியுள்ளன.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் தாய்லாந்து விஜயத்தின் போது இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான தொழிலாளர் துறையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects