அமெரிக்க தூதுவருக்கும், பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயருக்கும் (Eric Meyer) பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கும் இடையிலான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, வளர்ச்சி பெற்றுவரும் அமெரிக்க – இலங்கை பாதுகாப்புப் பங்காண்மை குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. 

இச்சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புச் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. 

பத்து TH-57 ஹெலிகொப்டர்கள், அமெரிக்க கடலோரக் காவல் படையின் நான்காவது கட்டர் (Cutter) கப்பல் மற்றும் இலங்கை கடற்படையின் கரைவெளியோர ரோந்துக் கப்பல்களுக்காக 4 மில்லியன் டொலர் பெறுமதியான அதிநவீன செயற்கைக்கோள் தகவல் தொடர்புத் தொகுதி என்பவற்றை இலங்கைக்கு வழங்கியது உட்பட, அண்மைக்காலத்தில் அமெரிக்கா வழங்கிய ஆதரவு இதன்போது பாராட்டப்பட்டது. 

இந்தப் பாதுகாப்புத் திறன்களை மேலும் மேம்படுத்துதல், இராணுவத் தயார்நிலையை உயர்த்துதல் மற்றும் சமுத்திரப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், இந்தியப் பெருங்கடலிலும் இந்தோ – பசுபிக் பிராந்தியம் முழுவதிலும் இரு நாடுகளின் பொதுவான நலன்களை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects