உள்நாட்டு முதல்தர கழகங்களின் எண்ணிக்கையை குறைக்க கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழு பரிந்துரை!

உள்நாட்டுக் கிரிக்கெட்டை மறுசீரமைப்பதற்கான தனது திட்டங்களின் ஒரு பகுதியாக, தற்போதுள்ள 14 முதல்தர கிரிக்கெட் ‘ஏ’ (Major Tier ‘A’) கழகங்களின் எண்ணிக்கையை எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் 10 ஆகக் குறைப்பதற்கு கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழு பரிந்துரைத்துள்ளது.

இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் விளையாட்டு தொடர்பான ஏனைய விடயங்கள் குறித்த குழுவின் அறிக்கையின்படி, டயர் ‘பி’ (Tier ‘B’) பிரிவில் போட்டியிடும் கழகங்களின் எண்ணிக்கை மாற்றமின்றி 12 ஆகத் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வளர்ச்சியைப் பாதிக்கும் பரந்த அளவிலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் அதேவேளையில், உள்நாட்டுக் கழகக் கட்டமைப்பைச் சீரமைப்பதை நோக்கமாகக் கொண்டு, முன்மொழியப்பட்டுள்ள இந்த மறுசீரமைப்பு இரண்டு ஆண்டு காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects