கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடமும் (FHCS), யுனெஸ்கோவுக்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவும் (SLNCU) இணைந்து நடாத்தும் “சர்வதேச சமாதான தினம் 2026” கொண்டாட்ட நிகழ்வு 21.09.2026 அன்று நடைபெற்றது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் தலைமையில் மட்டக்களப்பு, பிள்ளையாரடி, ரெயின்வூட் எஸ்டேட்டில் அமைந்துள்ள சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் ரீ.வரகுணம் நினைவு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பீ.பிரதீபன் கலந்து கொண்ட நிகழ்வில் இலங்கை தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் பேராசிரியர் ஜிஹான் பெரேரா பிரதம பேச்சாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
மேலும் மாணவர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் சமாதான உறுதிமொழி இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி மற்றும் அதிதி உரைகள் இடம்பெற்று, தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் பேராசிரியர் ஜெஹான் பெரேரா அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து மாணவர்களின் சமாதானம் மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்தும் நாடகம், கல்வியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் பங்கேற்கும் குழு விவாதம். மாணவர்களின் சமாதான ஆதரவு நடவடிக்கைகள், “Chronicles of Peace” சிறப்பு மலர் வெளியீடு மற்றும் மாணவர்களால் வரையப் பட்ட சமாதானக் கண்காட்சி மற்றும் விருது வழங்கும் விழா என்பன இடம் பெற்று நன்றியுரையினை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









