ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த பின்னவல மத்திய மகா வித்தியாலயம், மாத்தளை ஸ்ரீ சீவலி வித்தியாலய மாணவர்கள்!

‘Vision’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், பின்னவல மத்திய மகா வித்தியாலயம் மற்றும் மாத்தளை ஸ்ரீ சீவலி வித்தியாலயம் ஆகியவற்றின் மாணவர்களுக்கு ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிடுவதற்காக 24.09.2026 அன்று சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகம் , கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு ஆகியன பாடசாலை மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தும் ‘Vision’ திட்டத் தொடருக்கு அமைவாகவே பாடசாலைகளுக்கு இச்சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்றக் கட்டடத்தைப் பார்வையிட்ட பின்னர், பாராளுமன்ற வரலாறு குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

ஜனாதிபதி நிதியத்தின் பங்களிப்பு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு அதன் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே இங்கு விளக்கமளித்தார்.

‘Vision’ திட்டத்தின் இரண்டு ஆண்டுகால பயணம் மற்றும் அதன் சிறப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட ‘Vision’ நினைவு மலர் நிகழ்வில் பங்கேற்ற பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டன.

இத்திட்டத்திற்கு இணையாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மேற்படி பாடசாலைகளுக்கு பெறுமதிமிக்க மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பொதுமக்கள் தொடர்பு பிரிவு பணிப்பாளர் நாயகம் தர்மஸ்ரீ கமகே, முப்படைகளின் ஒருங்கிணைப்புப் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பணிப்பாளர், பின்னவல மத்திய மகா வித்தியாலயம் மற்றும் மாத்தளை ஸ்ரீ சீவலி வித்தியாலயம் ஆகியவற்றின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects