சீரற்ற காலநிலையால் 13 மாவட்டங்களில் 583 குடும்பங்களைச் சேர்ந்த 2,113 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 583 குடும்பங்களைச் சேர்ந்த 2,113 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

மண்சரிவு மற்றும் சிறு வெள்ளப்பெருக்கு அனரத்தங்கள் காரணமாக ஒரு வீடு முழுமையாகவும், 213 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தொடரும் மழையின் காரணமாக ஜின் கங்கை மற்றும் நீள்வள கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் பல வீதிகளும், தாழ்நிலப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக, அக்குரஸ்ஸ – சியம்பலாகொட – பஸ்கொட ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து முழுமையாகத் தடைப்பட்டுள்ளது.

மக்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்தினாலும், அவ்வீதிகளில் பெரிய குழிகள் ஏற்பட்டுள்ளதால் பயணம் செய்வது மிகவும் கடினமாகியுள்ளது. அக்குரஸ்ஸ – மாரகொடை மற்றும் மொரவக்க – நெலுவ வீதிகளின் சில பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கி வருவதால் போக்குவரத்துத் தடைகள் ஏற்பட்டுள்ளன.

இந்தச் சூழலில், 8 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அதற்கமைய, மாத்தறை மாவட்டத்தில் பஸ்கொட, கொட்டபொல, பிட்டபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்படை, கம்புறுபிட்டிய மற்றும் திஹகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆற்றுடன் இணைந்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, பிரதான நீர் நிலைகளின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளதால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் 01 வான்கதவும் இன்றும், பொல்கொல்ல நீர் தேக்கத்தின் 02 வான்கதவுகள் நேற்றைய தினம் திறக்கப்பட்டுள்ளன. 

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects