2026 செப்டம்பர் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவித்தல்!

2026 செப்டம்பர் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு, ஒக்டோபர் 01 ஆம் திகதி பயனாளிகளின் ‘அஸ்வெசும’ வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்படவுள்ளதாக நலன்புரிப் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, அஸ்வசும நலன்புரி நன்மைகள்பெறும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 616,755 முதியோர்களுக்காக 3,083.755 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 79,063 முதியோர்களுக்காக 395.315 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இவ்விரு கட்டங்களின் கீழும் 695,818 முதியோர்களுக்காக மொத்தம் 3,479.07 மில்லியன் ரூபாய் செலுத்தப்படவுள்ளது.

பயனாளிகள் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் தங்களது முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects