இலங்கைக்கு சுமார் 3 தொன் காசநோய் (TB) தடுப்பு மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்த மருந்துகள் இந்திய விமானப்படையின் C-130J ரக விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொது சுகாதாரக் கட்டமைப்புக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சுகாதார சேவைகள் உள்ளிட்ட துறைகளில் இலங்கைக்கு இந்தியா தொடர்ச்சியாக வழங்கி வரும் ஆதரவின் ஒரு பகுதியாக இந்த மருந்து உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை – இந்தியா இடையிலான சுகாதாரத்துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த உதவி அமைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








