‘டித்வா’ புயலுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பமாகவுள்ள மலையக மார்க்க ரயில் சேவை!

‘டித்வா’ புயலுக்கு பின்னர் முதன்முறையாக, கொழும்பு கோட்டைக்கும், பேராதனை வழியாக கம்பளைக்கும் இடையிலான சாதாரண ரயில் சேவைகள் எதிர்வரும் ஒக்டோபர் முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி குறித்த ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

டிட்வா புயல் காரணமாக ரம்புக்கனை – கணேவத்தை இடையிலான ரயில் பாதையில் 103 இடங்களில் சேதங்கள் ஏற்பட்டிருந்தன.

இதில் 36 இடங்களில் பாரிய மண்சரிவுகளும், 67 இடங்களில் பாறைகள் மற்றும் மண்மேடுகளும் இடிந்து விழுந்த சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.

ரம்புக்கனை – கடுகன்னாவை ரயில்வே திணைக்களத்தின் ரயில் பாதை அமைப்பு மிக அதிகமான செங்குத்தான சரிவைக் கொண்ட பாதைகளுள் ஒன்றாகும்.

அப்பகுதிக்குச் செல்வதற்கான மாற்று வழிகள் இல்லாமை, மோசமான வானிலை மற்றும் தேவையான இயந்திரங்கள் மற்றும் பொருட்களை ரயில் மூலமே கொண்டு செல்ல வேண்டியிருந்தமை போன்ற சவால்களுக்கு மத்தியில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து புகையிரத திணைக்களத்தின் பாதை மற்றும் தொழிற்சாலைத் திணைக்களத்தினால் அனைத்துப் புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, தற்போது பாதை போக்குவரத்திற்குப் பொருத்தமான நிலைக்குக் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை – பேராதனை வழியாக கம்பளை இடையிலான சாதாரண ரயில் கால அட்டவணை 2026/10/02 ஆம் திகதி பிற்பகல் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அன்றிலிருந்து பின்வரும் ரயில் பயணக் கால அட்டவணை அமுல்படுத்தப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects