கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் விசேட மாநாடு!

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குச் செல்பவர்களின் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலையை உறுதி செய்ய வேண்டியது மிகவும் அவசியம் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்பது ஆபத்தானதாக மாறாமல், ஒரு சிறந்த வாழ்வாதார வாய்ப்பாக அமைய வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், ஒருவர் வெளிநாடு செல்வதற்குத் தயாராகும் காலம் முதல் பணியை முடித்து மீண்டும் தாய்நாடு திரும்புவது வரை அனைத்துக் கட்டங்களிலும் முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து பணிக்குச் சென்று உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நஷ்டஈட்டுத் தொகை 20 இலட்சம் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோன்று வெளிநாட்டு ஊழியர்களுக்கான பிரத்யேக பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டமும், புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சட்டமூலமும் தயாரிக்கும் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன.

மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் நாட்டின் தேர்தலில் வாக்களிப்பதற்குப் பொருத்தமான புதிய பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘LankaKonect’ செயலி மூலம் வெளிநாட்டிலுள்ள ஊழியர்கள் தங்களின் பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுளை நேரடியாகப் பதிவு செய்து விரைவான தீர்வுகளைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக்குச் செல்லும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு மட்டும் அரசாங்கத்தின் பணி முடிந்துவிடாது எனக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், ஊழியர்களின் உரிமைகள், கண்ணியம், பாதுகாப்பு மற்றும் அவர்களின் குடும்பங்களின் நீண்டகால பொருளாதார வாழ்வாதாரத்தை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் எனத் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects