2025/2026 ஆண்டின் வரி செலுத்துவதற்கான இறுதி திகதி இன்று – உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்குரிய இறுதி வருமான வரிச் செலுத்தலை இன்றுடன் (30.09.2026) நிறைவு செய்யுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரி செலுத்துவோருக்கு அறிவித்துள்ளது.

நிறுவனங்கள், தனிநபர் மற்றும் கூட்டாண்மை வியாபார வருமான வரி செலுத்தும் அனைத்து வரி செலுத்துவோரும் கொடுப்பனவு காலப்பகுதி குறியீடாக (Payment Period Code) 25260 ஐப் பயன்படுத்த வேண்டும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி,

நிறுவன வருமான வரி – Tax Type Code 02

தனிநபர் வருமான வரி – Tax Type Code 05

கூட்டாண்மை வியாபார வருமான வரி – Tax Type Code 09 என உரிய வரி வகையின் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும்.

இணையவழியில் வரிகளைச் செலுத்துவதற்கான வசதிகள் உள்ள அதேவேளை, வரி செலுத்துவோர் எந்தவொரு இலங்கை வங்கி (Bank of Ceylon) கிளைக்கும் சென்றும் கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்.

குறிப்பிட்ட இறுதித் திகதிக்குப் பின்னர் கொடுப்பனவுகளைச் செய்யும்போது வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்பதால், உரிய திகதிக்கு முன்னர் வரிகளைச் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கோரியுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் 1944 என்ற உடனடித் தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects