களனி குருகுல வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு, ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற கேட்போர் கூடத்தில் 02.10.2026 அன்று நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு ஆகியன ஒன்றிணைந்து பாடசாலை மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தும் ‘Vision’ நிகழ்ச்சித்திட்டத் தொடருக்கு அமைவாக குருகுல வித்தியாலயத்திற்கு இந்த வாய்ப்பு கிடைக்கப் பெற்றது.
மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சபாநாயகர் நியமனம், சபாநாயகர் சத்தியப்பிரமாணம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் என்பன இடம்பெற்றன.
இதன்போது, இலங்கை பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்கால தலைமைத்துவம், பாராளுமன்ற பாரம்பரியத்தின் வரலாறு மற்றும் பாராளுமன்றத்தின் பங்களிப்பு குறித்து தெளிவுபடுத்தினார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, ஜனாதிபதி நிதியத்தின் பங்களிப்பு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு அதன் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டினார்.
மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்பை ஊக்குவிக்குமுகமாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில் பாடசாலைக்கு பெறுமதிமிக்க கன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஜனாதிபதியின் பொதுமக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிரி கமகே, இலங்கை பாராளுமன்றத்தின் பணிப்பாளர் (தொடர்பாடல்) சமந்த மல்லவஆரச்சி, இலங்கை பாராளுமன்றத்தின் உதவிப் பணிப்பாளர் (மனிதவளம்) சூலா ஹேரத், ஜனாதிபதி செயலகத்தின் முப்படை ஒருங்கிணைப்புப் பிரிவின் பணிப்பாளர் எயார் கொமடோர் ஆசிரி கால்லகே, உதவிப் பணிப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் நதீக தங்கொல்ல, குருகுல வித்யாலயத்தின் அதிபர் குசல பெர்னாண்டோ உட்பட ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.










இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








