அடுத்த ஆண்டு முதல் முன்பள்ளிகளுக்கும் கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர்

அடுத்த ஆண்டு முதல் முன்பள்ளிகளுக்கும் கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ தெரிவித்துள்ளார். 

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இன்று (05.10.2026) உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அதன்படி, அடுத்த ஆண்டு முதல் நாட்டின் அனைத்து முன்பள்ளிகளும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். 

இதற்கமைய 2027 ஆண்டு முதல் முன்பள்ளிகளில் பல்வேறுப்பட்ட வெவ்வேறு கல்வி முறைகளின் கீழ் கற்பிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

நாட்டின் மனிதவளம் குறித்து பிரதானமாகப் பொறுப்புக் கூறுவது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சாகும். 

கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முன்பள்ளிக் கல்விக்கும் சீர்திருத்தங்களைக்கொண்டுவந்து, எதிர்வரும் ஆண்டு முதல் முன்பள்ளிக் கல்விக்கு ஒரே பாடத்திட்டத்தையே அறிமுகப்படுத்தவுள்ளோம். 

இது அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். இனிமேல் முன்பள்ளிகளில் வெவ்வேறு விதமானவற்றை கற்பிக்க முடியாது. 

இதனுடன் சேர்ந்து, தற்போதைய நிலவரங்களைப் புரிந்து கொண்டு, தற்போதுள்ள மூன்று துறைகளிலுமுள்ள கல்வியைச் சீர்திருத்துவதற்காக நாங்கள் மிகவும் பாரிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளோம் என தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects