யாழ் மன்னார் வீதியான சங்குப்பிட்டிப் பாலம் தற்பொழுது புனரமைப்பு வேலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் ஓரு சில தினங்களுக்குசங்குப்பிட்டிப் பாலத்தினூடாக பயணம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தும் யாழ் மன்னார் போக்குவரத்து சேவைகள் வழமை போன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் யாழ்ப்பாணம் செல்லும் வீதியில் அமைந்துள்ள பிரதான பாலம் அமைந்துள்ள சங்குப்பிட்டிப் பாலம் இன்று (07.10.2026) முதல் எதிர்வரும் 12.10.2026 வரை புனரமைப்பு வேலைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் இப்பாலத்தினூடாக போக்குவரத்து செய்வது இக்குறிப்பிட்ட தினங்களுக்கு முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தும் மன்னார் யாழ் போக்குவரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் வழமையான போக்குவரத்து சேவைகள் நடைபெறும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது சங்குப்பிட்டிக்கு ஊடாக நடைபெறும் போக்குவரத்திற்குப் பதிலாக மாற்று வழிதடத்தில் இவ்சேவைகள் நடைபெறும் எனவும் இம்மாற்று வழிதடத்தால் பிரயாணம் செய்யும் தூரம் சுமார் ஐம்பது கிலோ மீற்றரால் அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாற்றுவழி தடத்தின் ஊடாக மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பேருந்துகள் பூநகரி – பரந்தன் ஊடாக யாழ்ப்பாணம் சென்று மீண்டும் அதே வழியில் சேவையில் ஈடுபடும்.
அதேபோன்று யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் செல்லும் பேருந்துகள் பரந்தன் – பூநகரி ஊடாக மன்னார் சென்று மீண்டும் அதே வழியில் சேவையில் ஈடுபடும்.
பயண தூரம் அதிகரிப்பதால் பேருந்து கட்டணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மற்றும் தனியார் பேருந்துகள் வழமையான நேர அட்டவணையின்படி தொடர்ந்து சேவையில் இருக்கும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









