அரச ஊழியர்கள் அனைவருக்கும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரி அறிமுகம்!

அனைத்து அரச ஊழியர்களுக்கும் அரசாங்கத்தின் மூலம் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் (Email) முகவரியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒட்டுமொத்த அரச சேவையையும் ஒரே வலையமைப்பில் இணைக்க முடியும் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், காணொளி மாநாடுகள் உள்ளிட்ட பணிகளுக்காக அரச அதிகாரிகளை எளிதில் தொடர்புகொள்ளவும், அரச நிறுவனங்களுக்கு இடையிலான தரவுப் பரிமாற்றத்தை மேலும் திறம்பட மேற்கொள்ளவும் இந்தத் திட்டம் உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பெரும்பாலான அரச ஊழியர்கள் தமது பணிகளுக்காக தனிப்பட்ட முறையில் உருவாக்கிய மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்துவதாகவும், அதற்குப் பதிலாக அரசாங்கத்தால் வழங்கப்படும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்துவதன் மூலம் அலுவல் ஆவணங்கள் மற்றும் முக்கியமான தரவுகளைப் பரிமாறிக்கொள்வது மேலும் இலகுவாகும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்தி, அதனை மேலும் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் உதவியாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects