பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த (ஓய்வு) மற்றும் ஐக்கிய நாடுகள் மருந்துகள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தின் தெற்காசியப் பிராந்திய பிரதிநிதி கிறிஸ்டியன் ஹோல்கே தலைமையிலான பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான உயர்மட்டச் சந்திப்பொன்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில், நாட்டின் தற்போதைய பாதுகாப்பு தேவைகள் மற்றும் ஐ.நா. மருந்துகள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தின் மூலம் பெறக்கூடிய மேலதிக உதவிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. முக்கியமாக, தகவல் ஒருங்கிணைப்பு மையத்தின் கடல்சார் தகவல் கூறுகளை நீதிமன்றச் சான்றுகளாகப் பயன்படுத்த அனுமதிப்பது, மற்றும் 2026 இல் இலங்கை கடற்படை, கடலோரப் பாதுகாப்புப் படைக்கு வழங்கப்பட்ட உதவிகளை மதிப்பாய்வு செய்தல் ஆகியவை குறித்து ஆராயப்பட்டது.
மேலும், மனித கடத்தலுக்கு எதிரான தேசிய பணிக்குழுவின் முன்னேற்றங்கள், பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இணையவழி மோசடிகள் மற்றும் ஆட்கடத்தல் அச்சுறுத்தல்கள் குறித்து இக்குழு கலந்துறையாடப்பட்டது.
அத்துடன், செயற்கை நுண்ணறிவு, ட்ரோன்கள் போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயங்கரவாதிகள் துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்க 2026 செப்டம்பரில் தொடங்கப்பட்ட பிராந்திய திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









