இலங்கை தேசிய சாரணர் ஜம்போரிக்கு அனுசரணை வழங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்களுக்கும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் 06.10.2026 அன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பிரதம சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நானாயக்கார, சர்வதேச ஆணையாளர் மற்றும் ஜம்போரி இணை ஏற்பாட்டாளர் வைத்தியர் அஸங்க ஏரியாவ, ஜம்போரி இணை ஏற்பாட்டு உதவி பிரதம ஆணையாளர் பொறியியலாளர் அமில் அபேசுந்தர ஆகியோருடன் உதவி பிரதம ஆணையாளர்கள், அரச நிறுவனங்களின் அதிகாரிகள், அரச மற்றும் தனியார் அனுசரணை நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சாரணர் ஜம்போரியினை வெற்றிகரமாக நடத்துவதற்காக அனுசரணை வழங்கும் அரச நிறுவனங்கள் மற்றும் நிதி ரீதியிலான அனுசரணை வழங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை இதற்காக வழங்கும் பங்களிப்புத் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கை சாரணர் இயக்கத்தின் 115 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 11 ஆவது தேசிய சாரணர் ஜம்போரி, 2027 ஆம் ஆண்டு ஜனவரி 17 முதல் 23 வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு வளாகத்தை மையமாகக் கொண்டு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சாரணர்கள் 12,000 பேருக்கு மேல் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு மிக முக்கியமான சந்தர்ப்பமான சாரணர் ஜம்போரியை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஆதரவளிப்பது மிகவும் அவசியமானது என்றும், இதற்காக அரசாங்கம் அதிகபட்ச ஆதரவை வழங்குவதற்கு இணையாக தனியார் துறையின் பங்களிப்பும் அவசியமானது எனவும் ஜனாதிபதியின் செயலாளர் இங்கு சுட்டிக் காட்டினார்.










இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()







