உலக பார்வை தினம் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தின் இரண்டாவது வியாழன் அன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில், இம்முறை “குழந்தைகளே, உங்கள் கண்களை நேசியுங்கள்” என்ற தொனிப்பொருளில் உலக பார்வை தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
குறிப்பாக, எளிய கண் பரிசோதனையின் மூலம் பார்வை தொடர்பான பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம், குழந்தையின் எதிர்காலத்தையே மாற்றியமைக்க முடியும் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, குழந்தைகளின் பார்வை ஆரோக்கியம் தொடர்பில் பெற்றோர் உரிய கவனம் செலுத்துவதுடன், பார்வை குறைபாடுகளுக்கான அறிகுறிகள் தென்பட்டால் தாமதமின்றி கண் பரிசோதனை மேற்கொள்ளுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()







