தனியார் துறையினருக்கும் இன்னும் ஓராண்டுக்குள் மெட்ரோ பஸ் சேவையில் இணைவதற்கு வாய்ப்பளிக்கப்படும் எனப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
மெட்ரோ பஸ்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராகப் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
தற்போது 100க்கும் மேற்பட்ட மெட்ரோ பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பெரும்பாலான தனியார் பஸ்கள் அவற்றின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாறான சம்பவங்களில் மிகச் சில தனியார் பஸ்களே தொடர்புபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது ஒட்டுமொத்த தனியார் பஸ் உரிமையாளர்களின் பிரச்சினையாகக் கருதப்படக் கூடாது எனத் தெரிவித்த அமைச்சர், மெட்ரோ பஸ் சேவையுடன் இணைந்து செயற்படுமாறும் தனியார் பஸ் உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
எவ்வாறாயினும், இன்னும் ஓராண்டுக்குள் மெட்ரோ பஸ் சேவையைத் தனியார் துறையினருக்கும் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









