யால தேசிய வனத்தின் 1ஆம், 2ஆம் வலயங்கள் மீண்டும் திறப்பு!

வறட்சியான காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த யால தேசிய வனத்தின்  1 ஆம் மற்றும் 2 ஆம் வலயங்களை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, யால தேசிய வனத்தை பார்வையிடுவதற்காக வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக குறித்த இரண்டு வலயங்களும் இம் மாதம் 16 ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளன.

நிலவிய கடுமையான வறட்சியான வானிலை காரணமாக வனவிலங்குகளின் பாதுகாப்பு கருதியும், வீதி அமைப்புகளை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காகவும் கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் யால தேசிய வனத்தின் 1ஆம் மற்றும் 2 ஆம் வலயங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

சுற்றுலாப் பயணிகளுக்காக தேசிய வனம் மீண்டும் திறக்கப்படுவதைத் தொடர்ந்து, சுற்றுலாப் விடுதிகள் மற்றும் முகாம் நிலங்களை முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects