கொரிய தன்னார்வ அமைப்பின் பிரதிநிதிகள் குழுவிற்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு!

நாட்டிற்கு சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கான கொரிய தன்னார்வ அமைப்பின் தலைவர் டியோகுஜு ஜங் (Deokuju Jung) உட்பட்ட விசேட பிரதிநிதிகள் குழுவினர் 12.10.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்தனர்.

இதன்போது, இலங்கையில் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படும் நலன்புரித் திட்டங்கள் மற்றும் அதற்காக இலங்கை அரசிடமிருந்து எதிர்பார்க்கப்படும் உதவிகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையிலுள்ள மாற்றுத்திறனுடைய பிள்ளைகளுக்காக அரசாங்கத்துடன் இணைந்து பரந்தளவிலான திட்டமொன்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பில் நாமல் உயனவின் ஸ்தாபகரும் நாமல் உயன ஆரண்ய சேனாசனாதிபதியுமான வனவாசி ராஹுல தேரர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, கொரிய தன்னார்வ அமைப்பின் பிரதிநிதிகளான Jungsun Choi, Junyoon Lim, Chaeeun Kim மற்றும் Wonwook Choi ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects