2026 ஆம் ஆண்டில் சர்வதேச நாணய நிதியம் 4% ஐ எட்டும்!

இலங்கையின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்திப் (GDP) வளர்ச்சியானது  2026 ஆம் ஆண்டில் 4% ஐ எட்டும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் வௌியிட்டுள்ள ஆசிய. பசுபிக் நாடுகளுக்கான பொருளாதார மதிப்பீடு தொடர்பான சமீபத்திய உலகப் பொருளாதார கண்ணோட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் 2027 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 3.7% ஆகக் வீழ்ச்சியடையும் என்றும் சர்வதேச நாணய நிதியம் எதிர்வுகூறியுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டில் 5 சதவீதமாக காணப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதை சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளில் வௌிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் பொருட்களின் விலையானது 2027ஆம் ஆண்டில் 5.4 % அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது கடந்த 2025 ஆம் ஆண்டில் – 0.5 ஆகவும், 2026 ஆம் ஆண்டில் 5.3 ஆகவும் காணப்பட்டது.

இதுதவிர நாட்டின் நடைமுறை கணக்கு கையிருப்பு 2025 ஆம் ஆண்டில் 1.6 ஆக காணப்பட்ட போதிலும், 2026 ஆம் ஆண்டில் -0.5 ஆகவும், 2027 ஆம் ஆண்டில் -0.3 ஆகவும் படிப்படியாக வீழ்சியடையும் என சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் வேலையற்றோரின் சதவீதமானது தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு வரையில் 3.9 ஆக காணப்படுகின்றது.

எவ்வாறாயினும் குறித்த தரவுகளின் அடிப்படையில் மொத்த ஆசிய நாடுகளின் பொருளாதாரமானது 2027 ஆம் ஆண்டில் 4.4 % ஆக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
 

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects