வீழ்ச்சியை பதிவு செய்த கச்சா எண்ணெய் விலை!

சவூதி அரேபியா மீதான தாக்குதல்களால் ஏற்பட்ட விநியோக அபாயங்களை வர்த்தகர்கள் மதிப்பீடு செய்த அதேவேளையில், ரஷ்யாவிடமிருந்து மேலதிக டீசல் விநியோகம் கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறுகளையும் கருத்தில் கொண்டதால், பீப்பாய்க்கு கிட்டத்தட்ட 2 அமெரிக்க டொலர் வரை உயர்ந்த கச்சா எண்ணெய் விலையானது இன்று (13.10.2026) அதிகாலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

குறிப்பாக, பிரென்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்களின் விலை 0.57% குறைந்து பீப்பாய்க்கு 106.04 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.

அதேநேரம், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WST) கச்சா எண்ணெய் விலை 0.5% குறைந்து பீப்பாய்க்கு 93.27 அமெரிக்க டொலராக விற்பனையாகின்றது.

கடந்த மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த விலையாக, திங்கட்கிழமை பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 106.65 என்ற விலையில் நிறைவடைந்தது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects