யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ‘குவியம் விருதுகள் 2026’

இலங்கைத் தமிழ் சினிமா கலைஞர்களை ஊக்குவித்து கௌரவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ‘குவியம் விருதுகள்’ நிகழ்வு, ஐந்தாவது ஆண்டாக கடந்த 10.10.2026 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இலங்கைத் தமிழ் சினிமா கலைஞர்களின் படைப்புகளையும் திறமைகளையும் அங்கீகரிக்கும் வகையில் நடைபெற்ற இவ்விருது விழாவில், இம்முறை காணொளிப்பாடல்கள், குறும்படங்கள், நடுத்தர நீளத் திரைப்படங்கள் (Pilot Films) மற்றும் திரைப்படங்கள் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் மொத்தமாக 48 விருதுகள் வழங்கப்பட்டதுடன், பல்வேறு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன. இதற்கான விண்ணப்பங்கள் இவ்வருடத்தின் நடுப்பகுதியில் கோரப்பட்டிருந்தன.

குவியம் விருதுகள் விழாவில் ஆண்டுதோறும் மூத்த சினிமா கலைஞர் ஒருவரைப் பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இவ்வருடத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது, ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘தீ’ (1979) திரைப்படம் முதல் கடந்த வருடம் வெளியான ‘தீப்பந்தம்’ திரைப்படம் வரை நடிப்புத் துறையில் தொடர்ந்து பயணித்து வரும் மூத்த நடிகர் ஏழுமலைப்பிள்ளைக்கு வழங்கப்பட்டது.

அத்துடன், சினிமாத் துறையில் தொடர்ச்சியாகப் பங்களித்து வரும் சிரேஷ்ட கலைஞர்கள் ஐவரைத் தெரிவுசெய்து ஆண்டுதோறும் கௌரவிக்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக, இம்முறை நடிகை சாந்தனா, இசையமைப்பாளர் பூவன் மதீசன், நடிகர் ஆதி திரு, இயக்குநர் காரை சிவநேசன் மற்றும் நடிகர் வசந்தசீலன் ஆகிய ஐவரும் சிறப்பாகக் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், ஸீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மகா நடிகை’ ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற நடிகை நிவேதிகா ராசையா மற்றும் அண்மையில் நாடளாவிய ரீதியில் வெளியான ‘கூத்தாடி’ திரைப்படத்தில் 12 வேடங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்வின் தாஸ் ஆகியோருக்கும் சிறப்பு கௌரவங்கள் வழங்கப்பட்டன.

சமகாலத்தில் இலங்கையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் ஒரேயொரு தமிழ் சினிமா விருது வழங்கும் விழாவாக ‘குவியம் விருதுகள்’ திகழ்வதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இம்முறை நடைபெற்ற விருது விழாவில் நாடளாவிய ரீதியில் இருந்து தமிழ் சினிமா கலைஞர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.

விருது வழங்கல் நிகழ்வுகளுக்கு மேலதிகமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன், அவற்றில் நாட்டின் முன்னணி கலைஞர்கள் பலரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

விருது பெற்றவர்களின் விபரங்கள் வருமாறு……..

Awards for Pilot films

01.Kuviyam Awards 2026
Best Pilot Film
Ammu

  1. Kuviyam Awards 2026
    Best Director
    RJ Nelu
    Ammu
  2. Kuviyam Awards 2026
    Best Actor – Male
    TK Kannan
    Ammu
  3. Kuviyam Awards 2026
    Best Actor – Female
    Pirasha Rajendran
    Jessica
  4. Kuviyam Awards 2026
    Best Cinematographer
    Vinothrone
    Jessica
  5. Kuviyam Awards 2026
    Best Editor
    Thinu Mahendran
    Ammu
  6. Kuviyam Awards 2026
    Best Music Director
    AJ Shangarjan
    Ammu
  7. Kuviyam Awards 2026
    Best Art Director
    K.Puviraj
    Anbin Minuminuppu
  8. Kuviyam Awards 2026
    Best Make Up
    Agal by Shagi
    Jessica
  9. Kuviyam Awards 2026
    Best Child Artist
    Yuktha Kajan
    Acacia
     
    Awards for Music Video
  10. Kuviyam Awards 2026
    Best Music Video
    Pirai Nila
  11. Kuviyam Awards 2026
    Best Visual Director
    Reji Selvarasa
    Pirai Nila
  12. Kuviyam Awards 2026
    Best Actor
    Sutharshan Raveendran
    Pirai Nila
  13. Kuviyam Awards 2026
    Best Actor – Female
    Dilki Dissanayake
    Pirai Nila
  14. Kuviyam Awards 2026
    Best Cinematographer
    Reji Selvarasa
    Pirai Nila
  15. Kuviyam Awards 2026
    Best Editor
    SS Kemal
    Yaar Kedpaar
  16. Kuviyam Awards 2026
    Best Music Director
    Sayeetharshan
    Pirai Nila
  17. Kuviyam Awards 2026
    Best Singer – Male
    Dharu
    Ezhutha Variyo
  18. Kuviyam Awards 2026
    Best Singer – Female
    Deshany Mahendran
    Sandi Veera
  19. Kuviyam Awards 2026
    Best Art Director
    K.Anabayan
    Hey Monalisha
  20. Kuviyam Awards 2026
    Best Make Up
    AK Madona
    Digital Kanavu
  21. Kuviyam Awards 2026
    Best Lyricist
    Mahi SR
    Ezhutha Variyo
  22. Kuviyam Awards 2026
    Best choreographer
    DDC
    Varta maame durr
  23. Kuviyam Awards 2026
    Best Rap Singer
    Rap Lady fire
    Yaar Kedpaar

Awards for Short Films

  1. Kuviyam Awards 2026
    Best Short Film
    1956 Ceylon
  2. Kuviyam Awards 2026
    Best Director
    Joy Jegarthan
    1956 Ceylon
  3. Kuviyam Awards 2026
    Best Actor – Male
    Alwish Clinton
    DMT
  4. Kuviyam Awards 2026
    Best Actor – Female
    Pavithra
    Dheera
  5. Kuviyam Awards 2026
    Best Cinematographer
    Abishek Palraj
    Mistry Hills
  6. Kuviyam Awards 2026
    Best Editor
    Prawin Ganesh
    Pastel
  7. Kuviyam Awards 2026
    Best Music Director
    Jeyanthan Wicky
    DMT
  8. Kuviyam Awards 2026
    Best Art Director
    VS Sinthu
    1956 Ceylon & Dheera
  9. Kuviyam Awards 2026
    Best Make Up
    Darian
    DMT
  10. Kuviyam Awards 2026
    Best VFX & Animation
    Sandeep Lakshan
    Mouna Silampu
  11. Kuviyam Awards 2026
    Best Sound Effects
    Sasikaran Yo
    1956 Ceylon

Awards for Feature film

  1. Kuviyam Awards 2026
    Best Film
    Theeppantham
  2. Kuviyam Awards 2026
    Best Director
    Raj Sivaraj
    Theeppantham
  3. Kuviyam Awards 2026
    Best Actor – Male
    Akash
    Theeppantham
  4. Kuviyam Awards 2026
    Best Actor – Female
    Mithuna
    Ahzhikkilinchil
  5. Kuviyam Awards 2026
    Best Supporting Actor – Male
    Ithayaraj
    AV007 & Pakadai Aaddam
  6. Kuviyam Awards 2026
    Best Supporting Actor – Female
    Savini Yakupitiya
    AV007
  7. Kuviyam Awards 2026
    Best Cinematographer
    AK Kamal
    Theeppantham
  8. Kuviyam Awards 2026
    Best Editor
    SR Thusikaran
    Ahzhikkilinchil
  9. Kuviyam Awards 2026
    Best Music Director
    Piranavan
    Ahzhikkilinchil
  10. Kuviyam Awards 2026
    Best Art Director
    VS Sinthu
    Theeppantham
  11. Kuviyam Awards 2026
    Best Make Up
    Andrew Julius
    Ahzhikkilinchil
  12. Kuviyam Awards 2026
    Best VFX & Animation
    Vipin Vijayan
    AV007
  13. Kuviyam Awards 2026
    Best Sound Effects
    Harish
    AV007
  14. Kuviyam Awards 2026
    Best Villain
    Sanjai
    Ahzhikkilinchil
  15. Kuviyam Awards 2026
    Best Debutant Director
    Eezham Aravinth
    AV007
  16. Kuviyam Awards 2026
    Talent of the Year
    Actor King Kajan
  17. Kuviyam Awards 2026
    A Special Honor to
    Actress Shanthana
  18. Kuviyam Awards 2026
    A Special Honor to
    Actor Vasanthaseelan
  19. Kuviyam Awards 2026
    A Special Honor to
    Director Karai Sivanesan
  20. Kuviyam Awards 2026
    A Special Honor to
    Music Director Poovan Matheesan
  21. Kuviyam Awards 2026
    A Special Honor to
    Actor Aadhi Diru
  22. Kuviyam Awards 2026
    Best Social Awareness Short Film
    Thunippai
  23. Kuviyam Awards 2026
    A Special Honor to
    Actress Nivedhikah Rasaiah
  24. Kuviyam Awards 2026
    Aspiring Film Maker
    Director Kesavan Thiruvaimoli
  25. Kuviyam Awards 2026
    Trending song of the Year
    Vediya podu
    ACACIA
  26. Kuviyam Awards 2026
    Best Comedian
    Kajanthas
    Theeppantham
  27. Kuviyam Awards 2026
    Best Web Series
    Piragash Rajah
    Pakadai Aaddam

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects