மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இளைஞர் நட்புறவு சுகாதார சேவை நிலையம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் மாவட்ட சுகாதார அமைச்சின் இணைப்பாளருமான கந்தசாமி பிரபு கலந்துகொண்டு நிலையத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
இந் நிலையத்தின் மூலம் இளைஞர்களுக்கு தேவையான சேவைகள் நட்பு ரீதியாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சேவைகள் தொடர்பான தெளிவூட்டல்களை துறைசார் நிபுணர்கள் வழங்கியமை குறிப்பிடத்தது.
இதன் போது மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி பிரபுவினால் மேற்பார்வை அதிகாரிகளுக்கான நிலையமும் வைத்திய சாலையில் திறந்து வைக்கப்பட்டது.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








