நாட்டின் சில இடங்களில் நாளை பலத்த மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் ஆறு மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் முதல் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை நாளை (14.10.2026) பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம் , மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் இவ்வாறு பலத்த மழை பெய்யக்கூடும்.

அத்துடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அந்த் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள வங்காள விரிகுடா கடற்பரப்பின் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, மேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.

இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் வெளியிடப்படும் வளிமண்டலவியல் முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects