ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான செய்தி!

அஸ்வெசும பயனாளர்களுக்கான ஒக்டோபர் மாதத்துக்கான கொடுப்பனவுகள் இன்று (14.10.2026) அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.


இதற்கமைய, அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழ் 985,283 பயனாளி குடும்பங்களுக்கு 9.12 பில்லியன் ரூபாய் தொகையும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,445 பயனாளி குடும்பங்களுக்கு 2.04 பில்லியன் ரூபாய் தொகையும் வழங்கப்படவுள்ளது.


அதன்படி, இரண்டு கட்டங்களின் கீழ் மொத்தம் 1,197,728 பயனாளி குடும்பங்களுக்கு 11.16 பில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது.


இந்த நிலையில், பயனாளர்கள் இன்று (14.10.2026) முதல் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக குறித்த பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects