சிங்கப்பூரின் ஒத்துழைப்புடன் கொழும்பு விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு மையம் – ஜனாதிபதி

சிங்கப்பூரின் ஒத்துழைப்புடன் கொழும்பு விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையமொன்றை நிறுவுவதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சிமாநாட்டில் 12.10.2026 அன்று உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

முன்மொழியப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு மையத்திற்கான அமைச்சரவை அங்கீகாரத்தை அடுத்த வாரம் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும், தகவல் தொழில்நுட்பத் துறையில் மேம்பட்ட திறன்களை வளர்ப்பதுடன், பட்டதாரிகள் எதிர்கொள்ளும் தொழில்வாய்ப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும் இதன் நோக்கங்களில் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களிலிருந்து ஆண்டுதோறும் சுமார் 17,000 மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறைக்குள் பிரவேசிக்கின்ற போதிலும், அவர்களுக்குப் பொருத்தமான தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதில் சவால்கள் காணப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தொழில்நுட்பத் துறையின் எதிர்காலம் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், தற்போது முக்கிய சவாலாக இருப்பது தொழிலாளர்களின் எண்ணிக்கையல்ல, மாறாக பட்டதாரிகளிடம் காணப்படும் தொழில்நுட்பத் திறன்களின் மட்டமே எனத் தெரிவித்தார்.பயண வழிகாட்டி

பல பட்டதாரிகள் இடைநிலைத் திறன்களைக் கொண்டுள்ள நிலையில், மேம்பட்ட தொழில்நுட்பத் துறைகளில் தொழில்வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவு, பாரிய தரவுப் பகுப்பாய்வு (Big Data), குவாண்டம் கணினியியல் (Quantum Computing) மற்றும் பிளொக்செயின் (Blockchain) போன்ற துறைகளின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப இலங்கையின் தகவல் தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி முறைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும், வணிகச் செயல்முறை வெளிப்பணியமர்த்தல் (BPO) நிறுவனங்கள் மற்றும் தொலைதூரப் பணிமுறைகள் ஊடாக சர்வதேச தொழில்வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

வேகமாக வளர்ச்சியடைந்து வரும் உலகளாவிய தகவல் தொழில்நுட்பத் துறைக்குத் தேவையான மேம்பட்ட தொழில்நுட்பத் திறன்களைக் கொண்ட பட்டதாரிகளை உருவாக்கும் வகையில் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கையின் தகவல் தொழில்நுட்பத் துறையை அதிக பெறுமதி கொண்ட மேம்பட்ட தொழில்நுட்பத் துறைகளை நோக்கி நகர்த்துவது, பட்டதாரிகளின் தொழில்வாய்ப்புச் சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கும் சிறந்த தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அவசியமானது எனவும் அவர் வலியுறுத்தினார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects