அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான வறுமையை ஒழிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ‘பிரஜா சக்தி’ தேசிய வேலைத்திட்டத்திற்காக ஒருகிணைந்த டிஜிட்டல் தரவு அமைப்பொன்றை தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
கிராமாபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தலைமையில் 13.10.2026 அன்று அந்த அமைச்சின் வளாகத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
பிரஜா சக்தி தேசிய செயலகம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சின் கீழ் இயங்கும் கிராம அபிவிருத்திப் பணியகம், கிராம அபிவிருத்தி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.
கிராமப்புற வறுமையை ஒழிக்கும் செயற்திட்டத்தில் அபிவிருத்தித் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளைக் கண்டறிவதற்குத் தேவையான தரவுகளை ஒரே டிஜிட்டல் தளத்தில் ஒருங்கிணைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிராமப்புற அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிப்பதற்கு இந்தத் தரவு அமைப்பைப் பயன்படுத்தக்கூடிய முறைமைகள் மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் திரு கபில குணரத்ன, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் திரு சம்பத் மந்திரிநாயக்க, மேலதிக செயலாளர் திரு மேனக ஹேரத், கிராமிய அபிவிருத்திப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி திலினி சுரங்கிகா உள்ளிட்ட பிரஜா சக்தி தேசிய செயலகத்தின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









