சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிப்பதற்கான விசேட குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிப்பு!

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட விதிமுறைகள் மற்றும் நிலையான உத்தரவுகளைப் புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் இடைக்கால அறிக்கை இன்று (14.10.2026) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த 08ஆம் திகதி முப்பீடங்களையும் சேர்ந்த மகா சங்கத்தினருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

குறித்த விடயங்களை ஆராய்ந்து, புதிய விதிமுறைகள் மற்றும் நிலையான உத்தரவுகளைத் திருத்துவதற்கான முன்மொழிவுகளை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிப்பது இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பாகும்.

அதற்கமைய, பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய மதத் தலைவர்கள் சிறையில் அடைக்கப்படும் சந்தர்ப்பங்களில் நடைமுறையில் உள்ள விதிமுறைகள் தொடர்பான திருத்த முன்மொழிவுகள் இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

குழுவின் தலைவராகச் செயற்பட்ட புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர, அறிக்கையை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்தார்.

இந் நிகழ்வில் குழு உறுப்பினர்களான நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிகச் செயலாளர் பியுமந்தி பீரிஸ், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிகச் செயலாளர் வசந்த ஆரியரத்ன, பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் ஆர். எம். ஜி. சேனாரத்ன மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளர் ஏ. சி. கஜநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects