பணம் வைப்புச் செய்யும் CDM இயந்திரங்களுக்கு அருகில் காத்திருந்து, பொதுமக்களின் அறியாமையையும் மனிதாபிமானத்தையும் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் புதிய வகை பண மோசடி தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மோசடியில் ஈடுபடுவோர், தங்களிடமுள்ள பணத்தை CDM இயந்திரத்தில் வைப்புச் செய்ய முடியவில்லை எனக் கூறி, அந்தப் பணத்தைப் பொதுமக்களிடம் கொடுத்து அதற்குப் பதிலாக வேறு பணத்தைக் கோருவதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது, முதலில் 500 ரூபாய் நாணயத்தாளைக் கொடுத்து அதனை மாற்றித் தருமாறு கோருகின்றனர். பின்னர், ஏற்கனவே 500 ரூபாய் வழங்கியதாகக் கூறும்போது, “அவ்வாறு எந்தப் பணத்தையும் வழங்கவில்லை” என மறுத்து, பொதுமக்களைத் திசைதிருப்பி பண மோசடியில் ஈடுபடுவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
எனவே, CDM இயந்திரங்களுக்கு அருகில் இவ்வாறான நபர்களிடம் பணப் பரிமாற்றம் செய்யும்போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









