2026 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இலங்கை 2,245.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை சுற்றுலாத்துறை வருமானமாக ஈட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
எனினும், கடந்த 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், சுற்றுலா வருமானத்தில் சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டு முதல் ஒன்பது மாதங்களில், சுற்றுலாத்துறை மூலம் 2,472.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக ஈட்டப்பட்டிருந்தது.
இதேவேளை, இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் சுற்றுலாத்துறை மூலம் 185.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளது.
இது கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் பதிவான 182.9 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்துடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பாகும்.
இதே வேளை இந்த ஆண்டின் ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான ஒன்பது மாத காலப்பகுதியில், 16 இலட்சத்து 93 ஆயிரத்து 679 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








