இலங்கையின் முதலாவது பயணிகள் போக்குவரத்து ட்ரோன் நாட்டை வந்தடைந்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.
இந்த ட்ரோனின் முதலாவது சோதனைப் பறப்பை இம்மாத இறுதியில் கொழும்பு துறைமுக நகரில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பயணிகள் ட்ரோன் ஒரே பயணத்தில் இருவரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதுடன், தொடர்ச்சியாக 30 நிமிடங்கள் வரை பறக்கக்கூடியது எனத் தெரிவிக்கப்படுகிறது.
பயணிகள் ட்ரோன்களின் பிரதான செயற்பாட்டு மையமாக கொழும்பு துறைமுக நகரம் பெயரிடப்பட்டுள்ளது.
ட்ரோன் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட விமானங்களை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்தும் நோக்கில், EHang நிறுவனம் முன்னெடுக்கும் “Global Fast Track Program” திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சிகிரியா, பிடுரங்கல மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்காகவும் இத்தகைய வான்வழிப் போக்குவரத்துச் சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()







