இந்திய–இலங்கை கூட்டுத் தயாரிப்பில் உருவாகி, விரைவில் திரைக்கு வரவுள்ள முழுநீள திரைப்படமான ‘Love 3’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கல்லாறில் அமைந்துள்ள தனியார் மண்டபமொன்றில் 18.10.2026 அன்று திரைப்படத்தின் இயக்குநரும் இசையமைப்பாளருமான Y. சுஜிதன் தலைமையில் நடைபெற்றது.
இத்திரைப்படமானது இரண்டு இந்திய மற்றும் இரண்டு இலங்கை தயாரிப்பாளர்களாக ஒன்றிணைந்த நான்கு நண்பர்கள் Films நிறுவனத்தால் தயாரிக்கப்படுவதாக அதன் இயக்குநர் தெரிவித்தார்.
இதன்படி, இந்தியாவைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த தயாரிப்பாளர்களில் ஒருவரும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தென்னிந்தியாவின் பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளை கலந்து கொண்டார்.
மேலும், விசேட விருந்தினர்களாக மன்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் U. உதயஸ்ரீதர், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் ஆகியோர் கலந்து கொண்டதுடன், இலங்கை சினிமாத்துறையைச் சேர்ந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்–நடிகைகள் உள்ளிட்ட திரைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
இதன்போது, ‘Love 3’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அதிதிகளால் ஒவ்வொன்றாக வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், குறித்த பாடல்களுடன் தொடர்புடைய கலைஞர்கள் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு நர்த்தனாலயா கலை மன்ற மாணவர்களினால் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.























இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()










