மட்டக்களப்பில் பால் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் குறைப்பதற்கான மாவட்ட வலையமைப்புக் கூட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பால் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் குறைப்பதற்கான மாவட்ட வலையமைப்புக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 20.10.2026 அன்று நடைபெற்றது.

உதவி மாவட்டச் செயலாளர் ஜி.பிரணவனின் மேற்பார்வையில், மாவட்ட பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் எஸ். அருணாளினியின் ஏற்பாட்டில் இக்கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்டத்தில் பாலின சமத்துவத்திற்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல், பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்நோக்கும் பாதிப்புகள், சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், பிரதேச செயலகப் பிரிவுகள் ரீதியாக நிலவும் பாதிப்புகள் தொடர்பில் உயர் அதிகாரிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் சிறுவர் பெண்களை பாதுகாப்பதற்கு அதிகாரிகள் துரிதமாக செயற்பட வேண்டும் என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக, தற்காலச் சூழலில் குடும்ப வன்முறைகள், தற்கொலை முயற்சிகள், இளம்பிராயக் கர்ப்பம் மற்றும் போதைப்பொருள் பாவனை போன்ற சமூகப் பிரச்சினைகளே பெரும் சவால்களாக உருவெடுத்துள்ளமை குறித்து இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்களை நீண்ட காலம் பாரமரிப்பதற்கான பெண்கள் காப்பகம் ஒன்றின் தேவைப்பாடு தொடர்பாகவும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், காவல்துறை அதிகாரிகள், மகளிர் அபிவிருத்தி அலுவலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects